ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

இத்தேர்வு கடந்த மாதம் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

சென்னை,

நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

4 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தகுதிப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு அந்தந்த மாநிலங்களில் மூலம் நடத்தப்படுகிறது.

Also Read
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: அரசாணை வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

அந்த வகையில், தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 2 தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது.

டெட் 2025 தேர்வு முடிவுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

TET paper 1

தேர்வு எழுதியோர் =91072

தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%)

தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%)

TET paper 2 -

சமூக அறிவியல்(Social Science)

தேர்வு எழுதியோர் =142861

தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)

தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )

TET paper II -

கணக்கு மற்றும் அறிவியல்

தேர்வு எழுதியோர் =186878

தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)

தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 % )

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com