யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Published on

சென்னை,

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மெத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 21) நிறைவு பெறுகிறது.

விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com