

புதுடெல்லி,
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 546 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சயின்டிபிக் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டண்ட் பப்ளிக் ப்ராசிகியூட்டர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:
பணி விவரம்;
இளநிலை அறிவியல் அலுவலர், அறிவியலாளர் ‘பி’, உதவி சுரங்கவியல் புவியியலாளர், விரிவுரையாளர்-1, சிறப்பு தர மருத்துவர்-3, தொழிற்பயிற்சி நிலைய கண்காணிப்பாளர் / துணை முதல்வர், மருத்துவ அலுவலர், ஆலோசகர், ஆராய்ச்சி அலுவலர் (வரைபடம்), உதவி அரசு வழக்கறிஞர், துணை மத்திய புலனாய்வு அலுவலர், மண்டல இயக்குநர், உதவி இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்), வான் பாதுகாப்பு அலுவலர், பேராசிரியர், இணைப் பேராசிரியர், வேதியியலாளர், உதவி இயக்குநர் தரம்-2 உள்ளிட்ட 546 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி: பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும்; பிடெக், பிஇ, எல்.எல்.பி, எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.சி.ஏ, ஏதாவது ஒரு டிகிரி, எம்பிபிஎஸ்
தேர்வு முறை; எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.25, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்; 03.07.2026
கூடுதல் விவரங்களுக்கு; https://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-06-2026-Engl-120626.pdf