மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி சின்னத்தம்பி நாடாரூரைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 58). எலக்ட்ரீசியனான இவர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று காலையில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. உடனே அமல்ராஜ் அங்குள்ள மின்மாற்றியில் ஏறி, பழுதை சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அமல்ராஜ் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று, அமல்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com