மின்துறை ஊழியர்கள், ஊர்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல்

மின்துறை ஊழியர்கள், ஊர்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மின்துறை ஊழியர்கள், ஊர்காவல் படை வீரரை தாக்கி கொலை மிரட்டல்
Published on

புதுச்சேரி

சேலம் மாவட்டம் புதுச்சாம்பள்ளியை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 46). தமிழக மின்துறை ஊழியர். இவர் தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்களான வெங்கடேஷ், ஜான் ரமேஷ் ஆகியோருடன் புதுச்சேரிக்கு வந்தார்.

சம்பவத்தன்று இரவு சுப்பையா சாலை வழியாக அவர்கள் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (25), ராஜா (25) உள்பட 3 பேர் வழிமறித்து தகராறு செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், ராஜா ஆகியோர் காசிராஜன், வெங்கடேஷ், ஜான்ரமேஷ் ஆகியோரை தாக்கி மிரட்டினார்கள்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட உருளையன்பேட்டை போலீஸ் நிலைய ஊர்காவல் படை வீரர் யுவராஜ் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் பிரபாகரன் தரப்பினர் அவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் பிரபாகரன், ராஜா உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com