கிணற்றில் பிணமாக மிதந்த என்ஜினீயர்

பழனி அருகே கிணற்றில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
கிணற்றில் பிணமாக மிதந்த என்ஜினீயர்
Published on

பழனி:

பழனி அருகே தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் (வயது 37). என்ஜினீயர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் அவருடைய குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தட்டான்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் முகேஷ் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் தற்கொலை செய்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். முகேசுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com