மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

பரப்பாடி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
Published on

இட்டமொழி, மே:

பரப்பாடி அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60). விவசாயி. இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். 3-வது மனைவி வசந்தா (40). சொந்த ஊர் சிறுமளஞ்சி ஆகும். நேற்று முன்தினம் மாடசாமி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி வசந்தாவை ஏற்றிக்கொண்டு சிறுமளஞ்சிக்கு சென்று, ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொண்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பரப்பாடி காமராஜ் நகர் பாலத்தில் வரும்போது பின்னால் அமர்ந்திருந்த வசந்தா திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இ்துகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com