பாரிஸ் நகரில் பிரான்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு


பாரிஸ் நகரில் பிரான்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 20 Dec 2022 1:25 AM GMT (Updated: 20 Dec 2022 4:29 AM GMT)

வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் வரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள், அங்கு பெருந்திரளாக திரண்டனர்.

பாரிஸ்,

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த பிரான்ஸ் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரிஸ் நகரில் பேருந்தில் சென்ற வீரர்களுக்கு வழிநெடுக ரசிகர்கள் கொடிகளை ஏந்தி, வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் வரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள், அங்கு பெருந்திரளாக திரண்டனர். அதனை தொடர்ந்து பால்கனி வழியாக கால்பந்து வீரர்கள் கைகளை அசைத்தவாறு வந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டனர்.


Next Story