பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை

காரைக்கால் அருகே குடும்ப தகராறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோட்டுச்சேரி

கீழகாசாக்குடி கோத்தாரி நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 35) பைனான்சியர். இவரது மனைவி சரண்யா (30), கல்வித்துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் ஆனந்தனுக்கும், சரண்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று  சரண்யா தனது குழந்தைகளை மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு, சொந்த வேலை காரணமாக புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்து காணப்பட்ட, ஆனந்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com