பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கும் முதல் அமைச்சர்...

பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கும் முதல் அமைச்சர்...
Published on

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்".

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. பொ

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "பொன்னியின் செல்வன் -1" திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com