கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

புதுச்சேரியில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
Published on

புதுச்சேரி,

கனமழை காரணமாக புதுச்சேரி கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், குருகிருஷ்ணாபுரம், ரத்னம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com