2011–ம் ஆண்டு முதல் 2½ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை

திருவள்ளூர் மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளார்.
2011–ம் ஆண்டு முதல் 2½ லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டு முதல் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவமாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் (பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவமாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து தலைமை தாங்கி மாணவமாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதல்அமைச்சரின் ஆணைபடி அனைத்து பள்ளிகளிலும் முதல் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 429 மாணவமாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

201718ம் கல்வியாண்டுக்கு 52 ஆயிரத்து 175 மாணவமாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவமாணவிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு பள்ளி மாணவமாணவிகளுக்கு இது போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் சலுகைகளை வழங்கி வருகிறது. மாணவமாணவிகள் இந்த சலுகையை பெற்று சிறப்பாக கல்வி பயில வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com