பழ வியாபாரி தற்கொலை

அரியாங்குப்பம் அருகே பழ வியாபாரி தற்கொலை செய்துக்கொண்டார்.
பழ வியாபாரி தற்கொலை
Published on

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் கெங்கை அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). அவரது மனைவி அஸ்வினி (35). இருவரும் மடுகரை ரோட்டில் தெப்பக்குளம் அருகில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். சில நாட்களாக பழ வியாபாரம் சரிவர இல்லாததால் மன உளைச்சலில் வேல்முருகன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தூக்கத்தில் இருந்து நள்ளிரவு வெளியே எழுந்து வந்த வேல்முருகன் வராண்டாவில் உள்ள மின் விசிறி கொக்கியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com