தினமும் 7 மணி நேர தூக்கம் அவசியம் - ஆய்வில் தகவல்

பலருக்கு தூக்கம் என்பதே சரியாக வருவதில்லை.
தினமும் 7 மணி நேர தூக்கம் அவசியம் - ஆய்வில் தகவல்
Published on

தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியடைந்த பிறகு இரவு - பகல் என நேர வித்தியாசம் இல்லாமல் ஐ.டி. நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன. அதில், பணிபுரியும் ஊழியர்களும் ஷிப்ட் அடிப்படையில் சென்று வருகின்றனர். பணியிலும், டார்கெட் கொடுக்கப்படுவதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகின்றன.

பலருக்கு தூக்கம் என்பதே சரியாக வருவதில்லை. நன்றாக தூங்கி எழுந்தால்தான் உடலில் ஒருவித புத்துணர்வு ஏற்படும். போதிய தூக்கம் இல்லை என்றால், உடல் சோர்ந்து போய்விடும். இது தொடர்பாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஆய்வை நடத்தியுள்ளது.

அதில், தூங்கச் செல்லும் நேரம், கண்விழிக்கும் நேரம் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 பிரிவாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய பிரிவில் இருந்தவர்களின் உடல்நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களில் இதயத்துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன் கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.

எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி, நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com