பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா? - அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு சிலர் தேன் கொடுப்பது வழக்கம்.
பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா? - அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்
Published on

பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவிவிடுவார்கள். அழுகையை நிறுத்துவதற்கும் சிலர் தேன் கொடுப்பது வழக்கம். குழந்தையும் தேனை விரும்பி ருசிக்கும். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. தேனில் கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனும் ஒரு பாக்டீரியம் உள்ளடங்கி இருக்கிறது.

இந்த வகை பாக்டீரியா குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் தன்மை கொண்டது. ஏனெனில் பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு ஒரு வயதை கடந்தபிறகுதான் உருவாகும். அதுவரை குழந்தையின் உடலால், இந்தவகை பாக்டீரியாவுக்கு எதிராக போராட முடியாது. தேனில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமான அமைப்பையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இதன் காரணமாக, குழந்தை பொட்டூலிசம் எனும் நோய் ஏற்படக்கூடும். சில நேரங்களில் இந்த நோய் குழந்தைக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும். குழந்தை சுவாசிப்பதில் சிக்கல் உருவாகும். அல்லது உடல் பலவீனமாகும். பொதுவாக இந்தவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மலச்சிக்கல்தான் முதல் அறிகுறியாக தென்படும். மேலும் சில அறிகுறிகளும் இருக்கின்றன.

அதனால்தான் குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவரை வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது. ஒரு வயதுக்கு பிறகு தேன் கொடுக்கலாம். ஆனால் மூன்று வயதுவரை குறைந்த அளவே தேன் கொடுக்கலாம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com