வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றுவது எப்படி?

காலையிலும் இரவு வேளையிலும் சீரகத் தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாயு பிரச்சினைக்கு தீர்வு
வாயு பிரச்சினைக்கு தீர்வு
Published on

வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம் அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும் போது, பேசிக் கொண்டே உண்ணும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும் போது , தண்ணீர் அண்ணாந்து குடிக்கும்போது இந்த காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும்.

இன்னும் உணவில் வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, அவரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், இவை அதிகமான வாயுவை செரிமானத்தின்போது உருவாக்குகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கான எளிய சித்த மருத்துவம் வருமாறு:-

Also Read
வெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டியவை..!
வாயு பிரச்சினைக்கு தீர்வு

வாயு பிரச்சினை நீங்க..

1) மோருடன் பெருங்காயம், சீரகம், சேர்த்து குடிக்க வேண்டும்.

2) காலை மற்றும் இரவு வேளையில் சீரகத் தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும்.

3 சித்த மருத்துவத்தில் அஸ்டாதி சூரணம்-1 கிராம் வீதம் காலை, இரவு, இள வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

3) காலை, மதியம் வேளைகளில் உணவு உண்டவுடன் ஒரு குறுநடை போட்டு அதன் பிறகு உட்கார வேண்டும், இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து, ஒரு மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும்.

4) இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்தது.

5) உணவில் மோர், தயிர், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் ஒய்.ஆர்.மானெக்சா

Also Read
தீராத மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்!
வாயு பிரச்சினைக்கு தீர்வு
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com