

மது உடலில் அமைந்திருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். மதுபானங்கள் அதி கமாக உட்கொள்வது கல்லீரலை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சில மருந்துகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளும் கல்லீரல் பாதிப்புக்கு காரணமாகக்கூடும்.
பாராசிட்டமால் போன்ற சில வலி நிவாரண மருந்து களை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொண்டால் கல்லீரல் கடுமையாக பாதிப்ப டையக்கூடும். அதிகம் உட்கொள்வது கல்லீரல் செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும். எனவே மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தின் அளவை கவனமாக சரிபார்த்து உட்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடல் பருமன் மற்றும் வளர் சிதை மாற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகும் அபாயமும் அதிகரிக்கும்.
அதிக கலோரி, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரை கலந்த பதப்படுத்தப் பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, கல்லீரல் நோய் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆரோக்கிய மான உணவுப் பழக்கமே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
4. மூலிகை மருந்துகள்
சில மூலிகை மருந்துகள் கூட அரிதாக கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சில தயாரிப்புகளில் வெளிப் படையாக தெரிவிக்காத பொருட்களும் கலந் திருக்கக்கூடும். அவை கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.
ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ஆகிய வைரஸ் தொற்றுகள் நீண்ட காலம் நீடித் தால் கல்லீரல் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு வழிவ குக்கக்கூடும். ஹெபடைட்டிஸ் பி-க்கு தடுப்பூசி உள்ளது. ஹெபடைட்டிஸ் சி-க்கு தடுப்பூசி இல்லை என்றாலும், தற்போதைய மருந்துகள் மூலம் பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும்.கல்லீரலை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு, உடல் எடை கட்டுப்பாடு, பாது காப்பான மருந்து பயன்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முக்கியமானவை.