உயர்தர சரும-ஸ்கால்ப் பராமரிப்புக்கு நூரி ஏஸ்தெடிக் கிளினிக்: ஆடம்பரம் அல்ல, அனைவருக்குமானது!

சருமம் மற்றும் உடல்நலப் பயணத்தில் முழுமையான அர்ப்பணிப்பை விரும்புபவர்களுக்கு ‘நூரி லாயல்டி மெம்பர்ஷிப்' (Nuri Loyalty Membership) கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
சம்யுக்தா ஆதித்தன்
சம்யுக்தா ஆதித்தன்
Published on

மிகச்சிறந்த, உயர்தர சருமப் பராமரிப்பு சிகிச்சை மேற்கொள்வதற்கு அதிக தொகை செலவிட வேண்டியிருக்கும் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நூரி ஏஸ்தெடிக் கிளினிக்' (Nuri Aesthetic Clinic), இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல் உயர்தர அழகியல் சிகிச்சை அனுபவத்தை வழங்கி வருகிறது.

அக்கறையான கவனிப்புடன் கூடிய உயர்தர அழகியல் சிகிச்சை அனுபவம் ஒரு சிலருக்கு மட்டுமானதாக அல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நூரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் எக்சோசோம்களுடன் கூடிய ‘மைக்ரோ நீட்லிங்' (Microneedling with Exosomes) மற்றும் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு வாய்ந்த பேஷியல் தெரபிகள் போன்ற மேம்பட்ட அழகியல் சிகிச்சைகளை வழங்குகிறது.

இதன் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன், ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதாவது நூரியின் சில அனுபவங்கள் அனைவருக்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமான சருமம், ஸ்கால்ப் பராமரிப்பு ஆடம்பரமல்ல, அவை ஒவ்வொருவரும் பெற வேண்டிய வசதிகள் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

நூரியில் ஸ்கின் பீல்ஸ் (Skin peels) மற்றும் முழுமையான ஸ்கால்ப் ஸ்பா சிகிச்சைகள் ரூ.4 ஆயிரம் முதல் தொடங்குகின்றன. இது பல சலூன்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட குறைவானது. அதே நேரத்தில், சாதாரண சலூன்களால் வழங்க முடியாத மருத்துவ ரீதியிலான சிறந்த தரத்தை, ஒரு உயர்தர மற்றும் நிபுணத்துவ சூழலில் நூரி வழங்குகிறது. நீங்கள் செலுத்தும் பணம் வெறும் சூழலுக்காக மட்டுமல்ல, துல்லியமான பலன்களைத் தரும் அனுபவமிக்க நிபுணத்துவம் மிக்க சிகிச்சைக்காகவும் தான்.

உயர்தர அழகியல் சிகிச்சை
உயர்தர அழகியல் சிகிச்சை

இந்த கிளினிக்கின் `தலைச்சரும ஸ்பா' (ஸ்கால்ப் ஸ்பா) மிகவும் வரவேற்பைப் பெற்ற சிகிச்சைகளில் ஒன்றாகும். முடி உதிர்தல், கூந்தல் அடர்த்தி குறைபாடு, தலையில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அழுக்கு படிதல் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த தீர்வாகும். கூந்தல் வேர்க்கால்களில் இருந்தே ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வளர்ச்சியைப் பெற விரும்புபவர்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் ஏற்றது. அத்துடன் பல்வேறு சரும வகைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட `ஸ்கின் பீல்' சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. உயர்தரம், நியாயமான கட்டணம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீதான உண்மையான அக்கறை ஆகியவற்றின் அடையாளமாக நூரி திகழ்கிறது.

தரமான சருமப் பராமரிப்பை இன்னும் எளிதாக்க, நூரி பிரத்யேக பேக்கேஜ்களையும் வழங்குகிறது. இதில் 4+1 மற்றும் 5+2 போன்ற சலுகைகள் மூலம், உங்கள் சருமத்திற்காக நீங்கள் செய்யும் முதலீட்டில் அதிக சேமிப்பையும் பெற முடியும். இது ஒருமுறை வந்து செல்லும் உறவல்ல, உங்கள் சருமத்துடன் நீண்ட காலத்தொடர்பை உருவாக்கும் நூரியின் உன்னத திட்டமாகும்.

சருமம் மற்றும் உடல்நலப் பயணத்தில் முழுமையான அர்ப்பணிப்பை விரும்புபவர்களுக்கு ‘நூரி லாயல்டி மெம்பர்ஷிப்' (Nuri Loyalty Membership) கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. ஆனாலும், சிறந்த சருமத்தை நோக்கிய உங்கள் முதல் அடி மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் அமைய வேண்டும் என்பதே நூரியின் நோக்கம்.

சர்வதேச கட்டமைப்புடன் கூடிய உள் அலங்காரம்
சர்வதேச கட்டமைப்புடன் கூடிய உள் அலங்காரம்

வலியற்ற சிகிச்சை

நூரி வழங்கும் லேசர் ஹேர் ரிமூவல் சிகிச்சை வலியற்றது. மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட சிறந்த முடிவுகளை தருவது. மற்றும் டைனமிக் பிரைசிங் மூலம் அனைவருக்கும் சாத்தியமான கட்டணத்தில் கிடைக்கிறது. அதிகமானவர்கள் பயனடையக்கூடிய வகையில் அழகியல் சிகிச்சைகளை வழங்குவதே நூரியின் நோக்கம்.

உயர்தரம்

சிறந்த சருமம் என்பது சிலருக்கு மட்டுமானது அல்ல. ஒவ்வொருவரின் உரிமை என்ற உறுதியான நம்பிக்கையில் நூரி உருவாக்கப்பட்டது. அமைதியான சூழலில், உயர்தர மருத்துவ மேற்பார்வையுடன் மருத்துவ தரமான சிகிச்சை அளிக்கிறது.

உயர்தர அழகியல் சிகிச்சை
உயர்தர அழகியல் சிகிச்சை

முகவரி:

நூரி ஏஸ்தெடிக் கிளினிக், எண்: 99/16, தரை தளம், நுங்கம்பாக்கம் சாலை (உத்தமர் காந்தி சாலை), நுங்கம்பாக்கம், சென்னை 600034.

முன்பதிவுக்கு: +91 72007 80602.

இணையதள முகவரி : https://www.nurimedclinic.com

‘நூரி ஏஸ்தெடிக் கிளினிக்' பற்றிய தகவல்களுக்கு கியூ.ஆர்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com