எலும்புகள் வலுப்பெற இந்த உணவுகள் கைகொடுக்கும்


எலும்புகள் வலுப்பெற இந்த உணவுகள் கைகொடுக்கும்
x
தினத்தந்தி 21 Dec 2025 3:53 PM IST (Updated: 21 Dec 2025 4:06 PM IST)
t-max-icont-min-icon

எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் சாப்பிடலாம். எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு மற்றும் சதையை குறைக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் ஏற்ற உணவுகள் குறித்து பார்ப்போம்.

1. பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், எள், முட்டைக்கோஸ், பிரக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகளில கால்சியம் சத்து உள்ளது.

2. கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி கீரை போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

3. உணவுகளில் சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, அத்திப்பழம், பேரீச்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.

4. லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், பீன்ஸ், பாதாம் பால் சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும். கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்.

கொள்ளு - 10 கிராம், மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடிக்க வேண்டும்.

5 ஒரு கிராம் குங்குமப் பூவை, 100 மிலி தேங்காய் எண்ணெய்யில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அதை இரண்டு துளி உள்ளுக்கு கொடுத்தும், உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலில் நடைபயிற்சி செய்து வந்தால் "விட்டமின் டி" உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

6.எலும்பொட்டிக் கீரை என்றழைக்கப்படும் ஒரு கொடி வகை தாவரம்: இந்தச் செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட வேண்டும்.

7.பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால், இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொண்டை காறல் வரும், ஆகவே பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிடவேண்டும்.

-டாக்டர் Y.R.மானெக்சா

1 More update

Next Story