

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகாசனம் ஏன் இன்றியமையாதது? என்பதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.
1. உடல் தோரணை, சுவாசம் மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நவீன நல்வாழ்வுக்கான திறவுகோலாக யோகா விளங்குகிறது.
2. உடல் இறுக்கத்தை விடுவிப்பதற்கும், மன அழுத்தத்தைக் கையாள்வதற்கும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதற்கும் யோகா இன்றியமையாதது.
3. உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான அணுகுமுறையை யோகா வழங்குகிறது.
4. யோகாசனங்கள் மூட்டுகளில் சிரமத்தை ஏற்படுத்தாமல், தசைகளை மெதுவாக நீட்டி உடலுக்கு நெகிழ்வுத்தன்மையையும், வலிமையையும் உருவாக்குகின்றன.
5. யோகா பயிற்சியை வழக்கமாக பின்பற்றும்போது உடல் தோரணை குறைபாடுகளை சரிசெய்து, நாள்பட்ட முதுகு வலி மற்றும் கழுத்து வலியை போக்க உதவிடும்.
6. யோகாவின் சில 'போஸ்'கள் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, ஓய்வு நேரத்தில் இதயத்துடிப்பை குறைக்கின்றன.
7. கார்டிசோல் அளவை குறைப்பதிலும், பதற்றத்தை சரிசெய்வதிலும் யோகா திறம்பட செயல்படுவதாக அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
8. தூங்க செல்லும் முன்பு பிராணாயாமம் செய்வது உடலை தளர்த்தி தூக்கத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
9. யோகாவின் ஒரு அங்கமான கவனத்துடன் கூடிய சுவாசம் மற்றும் தியானப் பயிற்சியானது, மனக்குழப்பங்களை நீக்கி, இயற்கையாகவே கவனிக்கும் திறனையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
10. யோகாசனத்தை பின்பற்றினால் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களின் மீது ஆர்வம் ஏற்படுவதும் படிப்படியாக குறைய தொடங்கிவிடும்.