இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் நிறைவு விழா கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி அமைப்பின் கலை, இலக்கிய பிரிவு மாநில தலைவரும் சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன் பேசும்போது, ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக் களின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் சென்னை போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். புதுவையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவையில் இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒதியஞ்சாலை சிக்னல் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர்கள் சிவமுத்து, மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் முருகையன், நிர்வாகிகள் சிவா, மணிவீரப்பன், நாகராஜ், தியாகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com