காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது நாராயணசாமி எதிர்ப்பு

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது நாராயணசாமி எதிர்ப்பு
Published on

புதுச்சேரி,

அனுமதிக்க முடியாது

காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்அமைச்சர் நாராயணசாமியிடம், நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. இதுபோன்ற அறிவிப்பு விவசாயிகளில் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு உடன்பாடு இல்லை. ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை ஏற்க முடியாது. மேலும் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றமுடியாது.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்று இருக்கலாம்.

அதைவிடுத்து எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது சரியானதல்ல. தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

புதுவையை பொறுத்தவரை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. தமிழக பகுதியிலிருந்து பலர் இங்கு சிகிச்சை பெற வருவதால் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதுபோல் தோன்றுகிறது. பன்றிக்காய்ச்சலை தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் அனைத்து பகுதிகளிலும் கொடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்விலிருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட முன்வரைவு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறு முதல்அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com