சிதம்பரத்தில், ஆசிரியை வீட்டில் ரூ.2½ லட்சம் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சிதம்பரத்தில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தில், ஆசிரியை வீட்டில் ரூ.2½ லட்சம் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

கடலூர்,

சிதம்பரம் சி.கொத்தங்குடி முத்தமிழ்நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மனைவி லாவண்யா (வயது 35). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டார்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க இரும்பு கேட் திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாவண்யா தனது வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அங்கு அவரது படுக்கை அறை மெத்தைக்கு கீழே மறைத்து வைத்திருந்த 15 பவுன் நகையை காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது பற்றி லாவண்யா சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com