ஓசூரில் அரசு டாக்டர் மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை

ஓசூரில் அரசு டாக்டர் மர்மமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் அரசு டாக்டர் மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை
Published on

ஓசூர்,

தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் கோகுல் (வயது 32). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு பிரிவு டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அங்கிருந்து, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாறுதலாகி, பணியாற்றி வந்தார்.

இவர் சண்டிகாரை சேர்ந்த ராதிகா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், பிறந்து ஒன்றரை மாதங்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர். டாக்டர் கோகுல், ஓசூர் அருகே சூளகிரியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியையும் நடத்தி வந்தார். இதற்காக இவர், ஓசூர் ரிங் ரோடு பகுதியில், பெற்றோருடன் வசித்து வந்தார். பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்ற மனைவி இன்னும் அங்கேயே தங்கியுள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு அவர், நள்ளிரவு 3 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு சென்றவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் கோகுலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான், அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். அரசு டாக்டர் மர்ம சாவு குறித்து ஓசூர் டவுன் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com