அதிராம்பட்டினம் அருகே நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை வாலிபர் கைது

அதிராம்பட்டினம் அருகே நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம் அருகே நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை வாலிபர் கைது
Published on

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 40). தொழிலாளி. இதே ஊரை சேர்ந்தவர் செல்வம் மகன் முருகேசன்(24). இவர்கள் இருவரும் உறவினர்கள்.

சுப்பிரமணியனுக்கும், முருகேசனுக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிர மணியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com