முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 767 கனஅடியாக இருந்தது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 767 கன அடியில் இருந்து 1,173 கன அடியாக அதிகரித்தது.

தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com