சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவராக இருப்பவர், நடத்தி வரும் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் போக்சோவில் கைது
Published on

மயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது பிரவுசிங் சென்டரில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியிடம் முகமது ரபீக், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com