பெண்ணை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்

கடைக்கு வேலைக்கு வரமறுத்த பெண்ணை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்
Published on

புதுச்சேரி

கடைக்கு வேலைக்கு வரமறுத்த பெண்ணை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேன்சி ஸ்டோர்

புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர் லிஜி (வயது 37). பெண்களுக்கான பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இந்த கடையில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே அந்த பெண் சம்பள பிரச்சினை காரணமாக திடீரென வேலைக்கு வராமல் இருந்தார். இந்தநிலையில் லிஜி, அவரது தாயார் ரேவதி, கேரளாவை சேர்ந்த நிமிஷா ஆகியோர் அந்த பெண்ணை நைசாக பேசி வரவழைத்தனர்.

நிர்வாண படம் எடுத்து மிரட்டல்

அப்போது அந்த பெண்ணை வேலைக்கு வரமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுதவாகவும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின்பேரில் மாகி போலீசார் வழக்குப்பதிவு செய்து லிஜி, ரேவதி, நிமிஷா ஆகியோரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com