காம்பாட் இஸட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

காம்பாட் இஸட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
Published on

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் புதிதாக காம்பாட் இஸட் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 50 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.999. வீடியோகேம் பிரியர்களைக் கவரும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி கொண்ட இதில் சுற்றுப் புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பத் துடன் கூடிய மைக்ரோபோன் உள்ளது. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. கருப்பு, கிரே, பச்சை உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com