இன்ஸ்டா 360 கோ 3 கேமரா அறிமுகம்

இன்ஸ்டா 360 கோ 3 கேமரா அறிமுகம்
Published on

இன்ஸ்டா நிறுவனம் புதிதாக 360 கோ 3 வீடியோ கேமராவை அறிமுகம் செய்துள்ளது. சிறிய அளவிலானதாக, 35 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளைப் பார்க்க வசதியாக தொடு திரை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுத்தும் வசதி இதில் உள்ளது. 170 நிமிடம் வரை இதில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்யலாம்.

இரண்டு மைக்ரோபோன் உள்ளதால், சுற்றுப்புற காட்சிகளோடு இயற்கை ஒலியையும் துல்லியமாக இதில் பதிவு செய்ய முடியும். குரல் வழி கட்டுப்பாடு, இன்ஸ்டா 360 செயலி மூலம் காட்சிகளை எடிட் செய்யும் வசதியும் உள்ளது. செயற்கை நுண்ணறிவு முறையிலான எடிட்டிங் வசதி, காட்சிகளை தத்ரூபமாக எடிட் செய்ய உதவுகிறது.

32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டதாக இந்த கேமரா வந்துள்ளது. வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்தக் கேமராவின் விலை சுமார் ரூ.32,795.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com