ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரஸ்-தி.மு.க. தான் காரணம் முரளிதர ராவ் பேட்டி

ஆலந்தூர், ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வுமே காரணம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரஸ்-தி.மு.க. தான் காரணம் முரளிதர ராவ் பேட்டி
Published on

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
முழு ஒத்துழைப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர பிரதமர் மோடி முழு ஒத்துழைப்பு வழங்கினார். 24 மணி நேரத்தில் உள்துறை உள்பட அனைத்து அமைச்சகத்தின் உத்தரவுகளை வழங்கி மத்திய அரசு சரித்திர சாதனையை செய்து உள்ளது.

இதையடுத்து மாநில அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது.

ஜல்லிக்கட்டு பிரச்சினை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் காரணம். தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை மத்திய அரசும், பாரதீய ஜனதா கட்சியும் உணர்ந்து செயல்பட்டு வருகிறது. மீனவர் விவகாரம் உள்பட பல பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, சிறந்த நிர்வாகத்தை தர பா.ஜ.க. விரும்புகிறது. மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com