ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா- அன்ன வாகனத்தில் அம்மன் ஊர்வலம்

வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா- அன்ன வாகனத்தில் அம்மன் ஊர்வலம்
Published on

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு வழிபாடுகள், அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகின்றன.

17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 14வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கோவில் முன்பு அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (18ஆம் தேதி) தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com