

கரூர்,
கரூர் நகர ஜெயலலிதா பேரவை முன்னாள் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். கரூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நஞ்சப்பன், கோழிப்பண்ணை செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ சவுந்திரராஜன், க.பரமத்தி ஒன்றிய முன்னாள் அமைப்பாளர் கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்-ன் 100-வது பிறந்தநாள் விழாவை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, 1 கோடி தொண்டர்கள்-மக்களை ஜெ.தீபா தலைமை ஏற்று வழி நடத்தி செல்ல வலியுறுத்துவது, கரூரில் முதல் மாநாடு நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் க.பரமத்தி ஒன்றிய பொருளாளர் சண்முகம், புன்னம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, உப்பிடமங்கலம் பேரூராட்சி 13-வது வார்டு செயலாளர் பழனிச்சாமி, 9-வது வார்டு செயலாளர் வி.கே.தங்கவேல், எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சின்னு என்ற ராமசாமி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.