பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாய்நகரை சேர்ந்தவர் முனீஸ்வரி (வயது 31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் களப்பணியாளராக உள்ளார். நேற்று மாலை பணி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பாண்டியாபுரம் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் சுதாரித்து கொண்ட முனீஸ்வரி சங்கிலியை பற்றி பிடித்துக்கொண்டு போராடியுள்ளார். இருப்பினும் 2 வாலிபர்களும் அவரை கீழே தள்ளிவிட்டனர். இதில் முனீஸ்வரி லேசான காயம் அடைந்துள்ளார். திருடர்கள் அவர் அணிந்திருந்த சங்கிலியை ஒரு பகுதியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com