மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்
Published on

கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும், பிக்பாஸ் படப்பிடிப்பிலும் மாறி மாறி பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் விக்ரம் பட வேலைகள் தாமதமாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சார்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபடியே கமல்ஹாசன் பேசிய காட்சிகளை திரையில் ஒளிபரப்பினர். அதில், கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனும், வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நடிக்கும் சண்டை காட்சியை படமாக்க பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து வந்தனர். தற்போது அரங்கு அமைக்கும் பணியை நிறுத்தி உள்ளனர். அந்த அரங்கை சென்னையில் அமைத்து சண்டை காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து குணமானதும் பொள்ளாச்சிக்கு பதில் சென்னையிலேயே விக்ரம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com