தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது. இன்று அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்போது மீண்டும் ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள்.

இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com