காத்திருப்போர் பட்டியல்

விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தில், நந்திதா-புதுமுகம் சச்சின் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
காத்திருப்போர் பட்டியல்
Published on

தற்கொலை செய்வதற்காக ரெயில் முன் பாய்ந்த நந்திதா!

பாலையா ராஜசேகர் டைரக்டு செய்ய, பைஜா டாம் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது என்கிறார், படத்தின் டைரக்டர் பாலையா ராஜசேகர். இதுபற்றி அவர் கூறுகிறார்:-

காத்திருப்போர் பட்டியல் கதைப்படி, கதாநாயகன் சச்சின் வேலையில்லாத பட்டதாரி. கதாநாயகி நந்திதா, மார்க்கெட்டிங் ஊழியர். இவர் ஒரு கட்டத்தில், வாழ்க்கையில் விரக்தி அடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இந்த காட்சியை சென்னையில் படமாக்கினோம்.

எதிரில் ரெயில் வருவது போலவும், அதை நோக்கி நந்திதா தண்டவாளத்தில் ஓடுவது போலவும் அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். ரெடி...ஆக்ஷன்... என்றதும், நந்திதா தண்டவாளத்தில் ஓட ஆரம்பித்தார்.

அதைப்பார்த்த பொதுமக்களில் சிலர், ஒரு பெண் உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடுவதாக நினைத்து, ஏ...பொண்ணு...ஓடாதே என்றபடி, அவரை காப்பாற்ற முயன்றனர். சினிமா படப்பிடிப்பு என்று பிறகுதான் அவர்களுக்கு புரிந்தது.

தினமும் ரெயிலில் பயணம் செய்பவர்களின் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை. அப்புக்குட்டி, அருள்தாஸ், சென்ராயன், மனோபாலா, மயில்சாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். சுகுமார், ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டிசம்பர் வெளியீடாக படம் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com