அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி
அரசு பஸ் மோதி முதியவர் பலி
Published on

துக்கோட்டை குளத்தூர் கண்ணாங்குடியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (70). இவர் திருச்சி-தஞ்சை சாலையில் அரியமங்கலம் அருகே கடந்த 8-ந் தேதி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணிசாமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com