

உப்பிலியபுரம், டிச.26-
கார் விபத்தில் பெண் உள்பட 2பேர் பலியானார்கள்.
குருவாயூர் கோவிலுக்கு...
உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 57). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலையில் ரவி மனைவி தமிழ்செல்வி (53), மகன் மதன், மருமகள் விஜிதா, நண்பரின் மகன் பிரசாந்த் (18) ஆகியோர் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட உப்பிலிபுரத்தில் இருந்து காரில் சென்றனர்.
சாவு
பாலக்காடு அருகே சென்றபோது, லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வி, பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விஜிதா மூளைச்சாவு அடைந்த நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் மாலையில் ஊருக்கு பிணமாக வந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.