ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் சாவு

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் உடல்நலக்குறைவால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் சாவு
Published on

வேலூர்

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் உடல்நலக்குறைவால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை கைதி

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மாதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). இவர் கடந்த 2004-ம் ஆண்டு கொலை வழக்கில் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மற்றும் கோவை ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த அவர் கடந்த 2014-ம் ஆண்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். சங்கர் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதையடுத்து உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சங்கருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சங்கர் உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு ஜெயில்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com