விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

குமாரபாளையம்,

விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 75 சதவீத கூலி, சம்பள உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ. விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும், 2015 மே 10-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிபாளையம் பகுதியில் 21.5 சதவீத கூலி உயர்வும் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்து 10 மாதம் ஆகிவிட்டது. எனவே அரசு இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து, 2016-17-ம் ஆண்டு 25 சதவீத போனஸ் கோரிக்கையை தீர்த்து வைக்க கோரியும், மே தினம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு 9 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, இ.எஸ்.ஐ., பி.எப்., பஞ்சப்படி தினம் ரூ.175 வழங்க வேண்டும், ஒவர்சிப்ட் முறையை ரத்து செய்ய வேண்டும். பவர்லூம் பேக்டரிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பிடம், முதலுதவி வசதி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் சம்மேள உதவி தலைவர் சுப்ரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் மோகன் தனபால் உள்ளிட்ட சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com