

ஆலங்குளம், மே:
ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின் நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கார்த்திக் (22), சத்யா (21), காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 பேர், அம்பை கோர்ட்டில் சரண் அடைந்திருந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற சுரேஷ் கண்ணன் தலைமறைவாகி இருந்தார். அவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.