கத்தியுடன் திரிந்தவர் கைது

புதுவை முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் நடந்த ரோந்து பணியின் போது ஏரிக்கரையில் கத்தியுடன் திரிந்தவர் கைது செய்தனர்.
கத்தியுடன் திரிந்தவர் கைது
Published on

புதுச்சேரி

முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வேல்ராம்பேட் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் சந்தேகப்படும்படியாக அங்கும் அங்கும் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, கத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைபோலீஸ் நிலையம் கொண்டுசென்று விசாரித்தபோது, வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com