மயிலாடுதுறையில் மாரத்தான் ஓட்டம்

மயிலாடுதுறையில் மாரத்தான் ஓட்டப் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் மாரத்தான் ஓட்டம்
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் மாரத்தான் ஓட்டப் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாரத்தான் போட்டி

நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு தினமாக அக்டோபர் 21-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நேற்று நீத்தார் நினைவு தின மாரத்தான் போட்டி மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்டது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போலீசார் மற்றும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பரிசுகள்-சான்றிதழ்கள்

மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது பட்டமங்கலத்தெரு, கால்டெக்ஸ் வழியாக பூம்புகார் சாலையில் 5 கிலோ மீட்டர் கடந்து மணக்குடியில் நிறைவடைந்தது.

இதில் வெற்றி பெற்ற முதல் 10 போட்டியாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com