

தர்மபுரி,
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து தர்மபுரி மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் காசி தமிழ்குமரன், திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் சிவாஜி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சாதிக்பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பாஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா ஆகியோர் கலந்து கொண்டு கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து பேசினார்கள். இந்த தாக்குதல் சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.