சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலி

காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.
சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலி
Published on

காரைக்கால்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிமெண்டு கலவை வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மேலையூர் பகுதியைச்சேர்ந்தவர் செபஸ்தியன் (வயது20). கொத்தனார். இன்று பகலில் வேலை விஷயமாக திரு-பட்டினத்திற்கு மோட்டார் சைக்களில் சென்றார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு திட்டச்சேரி சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

திட்டச்சேரி சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மீது சிமெண்டு கலவை எந்திர வாகனம் மோதியது.

உடல் நசுங்கி பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செபஸ்தியன் வாகன சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

விபத்து குறித்து திரு-பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய வாகன டிரைவர் திருமுருகனை தேடிவருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com