மருத்துவ போலீஸ் நிலையம்

கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் போலீஸ் நிலையம் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகள் மருத்துவ மையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மருத்துவ போலீஸ் நிலையம்
Published on

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும், பரிசோதனைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்கிறார்கள். போலீஸ் நிலையத்தில் மருத்துவ மையம் அமைப்பதற்கு கேரள அரசு நிதி உதவியும் வழங்கி இருக்கிறது.

குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக கண்ணூர் மட்டுமின்றி மேலும் 5 போலீஸ் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் பற்றி கண்ணூர் நகர சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டி.கே.ரத்னகுமார் கூறுகையில், கண்ணூர் நகர் பகுதியில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்குவதில்லை.

குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் பெற்றோர் சிரமப்படவேண்டியிருக்கிறது. அதனால் போலீஸ் நிலையத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசித்தோம். அதற்கு இந்திய மருத்துவ அகாடமியின் ஒத்துழைப்பு கிடைத்தது. சுழற்சி முறையில் 14 டாக்டர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் நிலையத்திற்கு வந்து சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளை கவரும் வகையிலும், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுவர்களில் கார்டூன்கள் வரைந்திருக்கிறோம். பொம்மைகள், குழந்தைகள் புத்தகங்களையும் வைத்திருக்கிறோம் என்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com