மோகினி

“சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”.
மோகினி
Published on

சிங்கம் 2 படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் மோகினி. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். அவருடன் சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, யோகி பாபு, சாமிநாதன், ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர் ஆர்.மாதேஷ். விஜய் நடித்த வெற்றி படமான மதுர படத்தை இயக்கிய இவர் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இசை-விவேக் மெர்வின். இவர் புகழ் படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு -ஆர்.பி.குருதேவ், படத் தொகுப்பு-விவேக் ஹர்ஷன்.

ஹாரர் திரில்லர் படமாக மோகினி உருவாகிறது. திரிஷாவின் சினிமா வரலாற்றில் இது அவருக்கு முக்கிய படமாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com