சாலையில் ஆயில் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

புதுவை நைனார்மண்டத்தில் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
சாலையில் ஆயில் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
Published on

புதுச்சேரி

புதுவை நைனார்மண்டத்தில் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.

டிப்பர் லாரி ஆயில்

புதுவை-கடலூர் ரோட்டில் நைனார்மண்டபத்தில் இன்று டிப்பர் லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்றது. அந்த லாரியில் இருந்த டேங்கில் இருந்து நட்டு கழன்றதால் ஆயில் சாலையில் கொட்டியுள்ளது. இது தெரியாமல் லாரியயை டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். நைனார் மண்டபத்தில் இருந்து சாலையில் ஆயில் கொட்டியபடி சென்றுள்ளது.

இதை மரப்பாலத்தில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் பார்த்து முருங்கப்பாக்கம் சந்திப்பில் பணியில் இருந்த போலீஸ்காரரிடம் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி முருங்கப்பாக்கத்தில் அந்த லாரியை மடக்கி நிறுத்தினர். இதற்கிடையே ஆயில் கொட்டியதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.

கடும் அவதி

உடனே கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல வைத்தனர். இதையடுத்து தகவல் தெரிவித்து புதுவை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தார்சாலையில் பரவிக்கிடந்த ஆயிலை அகற்றினார்கள். அதன்பின் வாகனங்கள் வழக்கமான பாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

எப்போதும் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com