மயிலாடுதுறை அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே, தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வழுவூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி உஷா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள்

உள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக உஷா, எலி மருந்தை தின்றதாக தெரிகிறது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உஷாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி

ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உஷா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உஷாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து உஷாவின் தந்தை வழுவூர் தோப்புத்தெருவை சேர்ந்த பாலு (60) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com